W E B B E R S P R O

Loading...

Ne summo dictas pertinacia nam. Illum cetero vocent ei vim, case regione signiferumque vim te. Ex mea quem munere lobortis. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum.

துபாய் செல்வதே இனி கஷ்டம்.. நிராகரிக்கப்படும் விசாக்கள்.. கடும் சிக்கலில் இந்தியர்கள்.. என்ன காரணம்?

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசா விதிகள் மாற்றம் காரணமாக துபாய்க்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. முக்கியமாக துபாய்க்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்த பலருக்கும் விசா நிராகரிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய சுற்றுலா விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொதுவாக கடுமையான சுற்றுலா விசா கொள்கையை கொண்டது. தற்போது தங்கள் கொள்கைகளை மேலும் கடினமாக்கி உள்ளது. புதிய விதிமுறையின் கீழ், சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவுச் சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் திரும்புவதற்கான டிக்கெட்டுகளை வளைகுடா நாட்டின் குடியேற்றத் துறையின் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதலாக, பயணிகள் துபாயில் தங்குவதற்கு போதுமான வங்கி இருப்பு இருப்பதையும் நிரூபிக்க வேண்டும். தனிநபர்கள் தங்களுடைய கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளை வழங்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் ₹50,000 இருக்க வேண்டும். பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும். கடன் வாங்கி நாட்டிற்கு ஓடி வருபவர்களை தடுக்க இந்த முறை. அங்கே ஹோட்டல்களில் தங்குவதற்குத் முன்பதிவு செய்ய வேண்டும். அதோடு போதிய பணம் வைத்திருக்க வேண்டும் என்று பல விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. விதிகள் மாற்றம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சுற்றுலா விசா விண்ணப்பங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்ததை அடுத்து, துபாய்க்கு செல்ல விரும்பும் இந்திய சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் விசா நிராகரிப்பை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, துபாய்க்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது, ​​நன்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வளைகுடா நகரத்திற்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு UAE சமீபத்தில் புதிய மற்றும் கடுமையான தேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறைகளின்படி, சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவு விவரங்களையும், திரும்ப டிக்கெட்டுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்களது உறவினர்களுடன் தங்கியிருப்பவர்களுக்கு, தங்குமிடத்திற்கான சான்றும் தேவை. அதாவது ஒருவருக்கு மட்டுமன்றி துபாயில் உங்களுடன் பயணிக்கும் எல்லோருக்கும் சான்று தேவை. தினசரி விசா நிராகரிப்புகள்: முந்தைய விசா நிராகரிப்பு விகிதமான 1-2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது விசா நிராகரிப்பு 5-6 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10 விண்ணப்பங்களை செய்தாலும் கூட அவை நிராகரிக்கப்படுகின்றன. உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் தங்கும் விவரங்கள் இணைக்கப்பட்டாலும், விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன, என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 

 பயணிகள் துபாயில் உறவினர்களுடன் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்களில், அவர்களின் வாடகை ஒப்பந்தம், எமிரேட்ஸ் ஐடி, குடியிருப்பு விசா நகல் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற கட்டாய ஆவணங்களை இணைக்க வேண்டும், அப்படி செய்தாலும் விசாக்கள் நிராகரிக்கப்படுகின்றன. விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் இருந்தாலும் பான் கார்டு விவரங்கள் காரணமாக பலரும் விசா பெற முடியாமல் சிக்கலில் மாட்டி உள்ளனர். அதிகரித்து வரும் நிராகரிப்புகள் காரணமாக பலரும் துபாய் செல்வது குறைந்துள்ளது. விசா கட்டணங்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் பதிவு செய்த பலர் விசா நிராகரிக்கப்படுவதால் முன் பதிவு கட்டணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பலரும் துபாய்க்கு விசா விண்ணப்பிப்பதை தவிர்க்க தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Leave A Comment